எத்தகைய நடவடிக்கை எடுத்தாலும் பணிக்கு திரும்ப மாட்டோம்: ஜாக்டோ ஜியோ
அரசு எத்தகைய நடவடிக்கை எடுத்தாலும் பணிக்கு திரும்ப மாட்டோம் என ஜாக்டோ ஜியோ அமைப்பினர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளதால் வேலைநிறுத்த போராட்டம் தொடர்ந்து 7வது நாளாக நீடித்து வருகிறது.
போராட்டம் நடத்தும் ஆசிரியர்கள் இன்றுக்குள் பணிக்கு திரும்பாவிட்டால் அவர்களது பணியிடம் காலியிடமாக அறிவிக்கப்படும் என அரசு அறிவித்துள்ள நிலையில் இன்று பெரும்பாலான ஆசிரியர்கள் பள்ளிக்கு திரும்பியுள்ளனர்.
ஆனால் கையெழுத்து போடாமல், பாடமும் நடத்தாமல் பள்ளி வளாகத்திலேயே அவர்கள் இருப்பதாக தெரிகிறது. இருப்பினும் தங்களது போராட்டம் தொடரும் என்றும், அரசின் எந்த நடவடிக்கைக்கும் தாங்கள் பயப்பட போவதில்லை என்றும் ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளை அரசு அழைத்து பேச வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.