ஜியோ வழங்கும் புதிய சலுகை: ரயில் பயணிகள் மகிழ்ச்சி

ஜியோ வழங்கும் புதிய சலுகை: ரயில் பயணிகள் மகிழ்ச்சி

தொலைத்தொடர்பு துறையில் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை வாரி வழங்கி வரும் ஜியோ நிறுவனம் தற்போது புதிய சலுகையாக ஜியோ ரயில் செயலியை வெளியிட்டுள்ளது. ஜியோ போன், ஜியோ போன் 2 வாடிக்கையாளர்களுக்காக பிரத்தியேக வெளியிட்டுள்ள இந்த சலுகையால் ரயிலில் பயணம் செய்யும் ஜியோ வாடிக்கையாளர்கள் பயனடைவர்.

ரயில்வே டிக்கெட் புக்கிங்கை ஜியோ போன், ஜியோ போன் 2 போன் மூலம் டிக்கெட் முன்பதிவு, பிஎன்ஆர் விபரங்களை பெற ஜியோ நிறுவனம் இந்த செயலி மூலம் ஏற்பாடு செய்துள்ளது . ஜியோ ஸ்டோரில் இந்த ஆப்பை டவுண்லோடு செய்யலாம்

இரு மொபைல் மாடல்களிலும் வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக், யூடியூப் உள்ளிட்ட ஆப்கள் வழங்கப்பட்ட நிலையில், ரயில் சேவை தொடர்பான விபரங்களை ரிலையன்ஸ் ஜியோ வழிவகுத்துள்ளது. இந்த செயலி மூலம் ரயில் பயண அட்டவனை, பி.என்.ஆர்., நிலவரம், டிக்கெட் பதிவு செய்த வரலாறு, முன்பதிவு செய்த டிக்கெட் ரத்து செய்வது, தட்கல் முன்பதிவு செய்ய ஜியோ ரயில் ஆப் பயன்படுகிறது.

Leave a Reply