பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு தயார்! சிவசேனா திடீர் பல்டி
நாடு முழுவதும் பாஜகவுடன் கூட்டணி வைக்க மாநிலக்கட்சிகள் தயங்குவது போல் மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சியுடனும் கூட்டணி வைக்க அம்மாநில கட்சிகள் தயக்கம் காட்டுகின்றன. எனவே பாஜகவுடன் கூட்டணி வைக்க தயார் என்றும், ஆனால் எங்கள் தலைமையில்தான் கூட்டணி வைக்க வேண்டும் என்றும் சிவசேனா கூறியுள்ளது.
இதற்கு பதிலடி கொடுத்துள்ள மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், ‘பா.ஜனதா கட்சி சிவசேனாவுடன் கூட்டணி அமைக்க விரும்புகிறது. ஆனால் கண்டிப்பாக கூட்டணி வைக்கவேண்டும் என்ற கட்டாயத்தில் இல்லை. நாங்கள் இந்துத்துவா கொள்கையின் அடிப்படையிலும், ஊழலுக்கு எதிராக போராடவே கூட்டணி அமைக்க விரும்புகிறோம். 60 ஆண்டுகளாக ஏற்படுத்தப்பட்ட குண்டு, குழிகளை வெறும் 5 ஆண்டுகளில் சரிசெய்ய முடியாது. நாங்கள் இந்த வேலையை தொடர விரும்புகிறோம்” என்று கூறினார்.
கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில்இந்த இரு கட்சிகளும் கூட்டணி வைத்ததால் பாஜக 23 தொகுதிகளிலும் சிவசேனா 18 தொகுதிகளிலும் வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.