உலக பொருளாதார மன்றத்தில் வெளியான தூத்துகுடி துப்பாக்கி சூடு சம்பவ படத்தின் ஃபர்ஸ்ட்லுக்

உலக பொருளாதார மன்றத்தில் வெளியான தூத்துகுடி துப்பாக்கி சூடு சம்பவ படத்தின் ஃபர்ஸ்ட்லுக்

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற அப்பகுதி மக்களின் போராட்டத்தின்போது கலவரம் ஏற்பட்டதாக கூறி போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 2 பெண்கள் உட்பட 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். நாடு முழுவதும் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் தூத்துக்குடி சூடு சம்பவம் திரைப்படமாக உருவாக்கப்படும் என சந்தோஷ் கோபால் என்கிற இயக்குநர் தெரிவித்துள்ளார். இவர் தேசிய விருது வென்ற ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராமிடம் உதவியாளராக இருந்தவர்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியபோது, மே-22 என்ற பெயரில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் படமாக்கப்படவுள்ளது. இதற்காக முதல் பார்வை போஸ்டர் ஸ்விட்சர்லாந்து, டாவோஸ்சில் உள்ள உலக பொருளாதார மன்றத்தில் வெளியிடப்பட்டது.

நிகழ்வில் திரைப்படம் தொடர்பாக சந்தோஷ் கோபால் பேசும் போது, அண்மையில் தமிழ்நாட்டில் நடைபெற்ற அரசியல் சார்ந்த உண்மை நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு இப்படம் தயாரிக்கப்படவுள்ளதாக அவர் கூறினார்.

முன்னதாக இவர் ஏற்கனவே, ஜல்லிக்கட்டு, பசுமை வழிசாலை சம்பவங்களும் திரைப்படமாக்கப்பட்டு வருகிறது. இதையும் சந்தோஷ் கோபால் தான் இயக்கி வருகிறார். என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply