11,12ஆம் வகுப்பினர்களுக்கான செய்முறை தேர்வு தேதி அறிவிப்பு
தமிழகம் முழுவதும் ஜாக்டோ ஜியோ அமைப்பிர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் 11ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான செய்முறை தேர்வுகள் வரும் பிப்ரவரி 13ம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
போராட்டம் ஒரு வாரத்திற்கும் மேல் நீடித்ததால் செய்முறை தேர்வு நடக்குமா? என்ற சந்தேகம் எழுந்த நிலையில் தற்போது போராட்டம் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டது. இந்த நிலையில் வருகின்ற 1ம் தேதி 12ம் வகுப்பு பொதுத் தோ்வுக்கான செய்முறை தோ்வுகள் நடைபெறும் என்றும் 11ம் வகுப்பு செய்முறை தேர்வுகள் வருகின்ற பிப்ரவரி 13ம் தேதி தொடங்கி 22ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து தேர்வுத்துறை இயக்குனர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.