இடைக்கால பட்ஜெட்டில் என்னென்ன எதிர்பார்க்கலா?

இடைக்கால பட்ஜெட்டில் என்னென்ன எதிர்பார்க்கலா?

2019 – 20 நிதியாண்டுக்கான, மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி உடல்நலக்குறைவால் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருவதால் இடைக்கால நிதியமைச்சர் பியூஷ் கோயல் பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்கிறார். மேலும் நாடாளுமன்ற தேர்தல் வரவிருப்பதால் இன்று தாக்கல் செய்யப்படுவது இடைக்கால பட்ஜெட் ஆகும்.

இன்று தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில், வேளாண்துறை குறித்த ஒருசில அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. விவசாயிகளுக்கு, 1 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு நிவாரணம் அளிக்கும் திட்டம்; உணவு மானியத்துக்காக, 1.8 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு; பயிர்க் காப்பீட்டுக்கான பிரீமியம் ரத்து; முறையாக கடனை செலுத்தும் விவசாயிகளுக்கு, வட்டி ரத்து போன்ற அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு உள்ளது.

அதேபோல் தங்கத்தின் மீதான வரி குறைப்பு, சுகாதார துறைக்கான ஒதுக்கீட்டை உயர்த்துதல் போன்ற அறிவிப்புளும் வெளியாகலாம்

நடுத்தர வருவாய் மக்கள் மற்றும் சிறு வர்த்தகர்களுக்கு, வருமான வரிச் சலுகை அறிவிப்பும் வெளியாகலாம்.

பொதுத் துறை காப்பீட்டு நிறுவனங்களில், 4,000 கோடி ரூபாய் முதலீடு; ஆண்டுக்கு, 5 கோடி ரூபாய்க்கு குறைவாக வியாபாரம் செய்யும் நிறுவனங்களுக்கு, கடன் வட்டியில் சலுகை போன்றவை அறிவிக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

 

Leave a Reply