உடுமலை கவுசல்யா பணியில் இருந்து சஸ்பெண்ட்

உடுமலை கவுசல்யா பணியில் இருந்து சஸ்பெண்ட்


சமீபத்தில் உடுமலை கவுசல்யா வெளியிட்டிருந்த ஒரு வீடியோவில் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக பணியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

குன்னூர் வெலிங்கடன் கன்டோண்மென்டில் பணி புரிந்து வந்த கவுசல்யா சமீபத்தில் இந்தியா குறித்து சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை தெரிவித்தார். இந்தியாவை ஒரு தேசமாக தான் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும், தமிழகத்தை ஒரு அடிமை மாநிலமாக இந்தியா வைத்து கொண்டிருப்பதாகவும் பேசினார்.

கவுசல்யாவின் இந்த பேச்சுக்கு சமூக வலைத்தளங்களில் கண்டனங்கள் எழுந்த நிலையில் அவர் பணிபுரிந்து வரும் குன்னூர் வெலிங்கடன் கன்டோண்மெண்ட் நிர்வாகம் அவரை அதிரடியாக சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே கவுசல்யாவின் இரண்டாவது கணவர் மீது பாலியல் குற்றச்சாட்டு காரணமாக ரூ.3 லட்சம் அபராதம் செலுத்திவிட்டு அடுத்த 6 மாதங்களுக்கு பொது நிகழ்ச்சிகளில் சக்தி பறை இசைக்கக் கூடாது என்று தண்டனை வழங்கப்பட்டிருந்த நிலையில் தற்போது கவுசல்யாவும் பணியை இழந்துள்ள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply