சிபிஐ புதிய இயக்குனராக பதவியேற்றார் ரிஷிகுமார் சுக்லா
சமீபத்தில் சிபிஐ அமைப்பின் புதிய இயக்குனராக நியமனம் செய்யபப்ட்ட ரிஷிகுமார் சுக்லா சற்றுமுன் பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு சக அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் சிபிஐக்கும் இடையே மோதல் வெளிப்படையாக தொடங்கி உள்ள நிலையில் ரிஷி குமார் இன்று பதவியேற்றுள்ளார்.
முன்னதாக தேர்வுக்குழு உறுப்பினர்களில் ஒருவரான காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ரிஷி குமாரின் நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தார். ஊழலுக்கு எதிரான அமைப்புகளில் பணியாற்றிய அனுபவம் அவருக்கு இல்லை என்று கூறி அவரின் நியமனத்தை எதிர்த்தார் கார்கே.