வீட்டை நிர்வாகம் செய்ய முடியாதவர் நாட்டை எப்படி நிர்வகிக்க முடியும்? நிதின்கட்கரி

வீட்டை நிர்வாகம் செய்ய முடியாதவர் நாட்டை எப்படி நிர்வகிக்க முடியும்? நிதின்கட்கரி

முதலில் உங்கள் வீட்டை கவனியுங்கள்; ஏனெனில் தனது வீட்டை நிர்வகிக்க முடியாத ஒருவரால் நாட்டையும் நிர்வகிக்க முடியாது என மத்திய அமைச்சர் நிதின்கட்காரி கூறியுள்ளார். அமைச்சரின் இந்த பேச்சு பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

வரும் பாராளுமன்ற தேர்தலில் ஒருவேளை பிரதமர் வேட்பாளர் மாற்றப்படுமானால், நிதின்கட்காரி பிரதமர் வேட்பாளராக வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் வீட்டை நிர்வகிக்க முடியாத ஒருவரால் நாட்டையும் நிர்வகிக்க முடியாது என மத்திய அமைச்சர் நிதின்கட்கரி பேசியுள்ளது ஒரு குறிப்பிட்ட நபரை மறைமுகமாக தாக்கியிருப்பதாக சமூகா வலைத்தளங்களில் வதந்தி பரவி வருகிறது.

ஏற்கனவே அரசியல்வாதிகள் நிறைவேற்ற முடிந்த வாக்குறுதிகளைத் தேர்தலில் அளிக்க வேண்டும். இல்லாவிட்டால் மக்கள் தூக்கி எறிந்துவிடுவார்கள் என்றும் சமீபத்தில் நிதின்கட்கரி பேசி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply