தர்ணா நடக்கும் இடத்தை அலுவலகமாக மாற்றிய மம்தா

தர்ணா நடக்கும் இடத்தை அலுவலகமாக மாற்றிய மம்தா

சிபிஐ அமைப்பை தவறாக பயன்படுத்தி மேற்குவங்க அரசுக்கு பல்வேறு இன்னல்களை மத்திய அரசு கொடுத்து வருவதாகவும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தர்ணா போராட்டத்தை நேற்றிரவு முதல் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி நடத்தி வருகிறார்.

இந்த போராட்டத்திற்கு இந்தியாவில் உள்ள முக்கிய எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. குறிப்பாக ராகுல்காந்தி, மு.,க.ஸ்டாலின் ஆதரவு கொடுத்துள்ளார். நேரில் ஆதரவு தெரிவிக்கவும் கனிமொழி உள்பட பல தலைவர்கள் கொல்கத்தாவை நோக்கி விரைகின்றனர்.

இந்த நிலையில் கொல்கத்தாவில் தர்ணா நடக்கும் இடத்தில் காவலர்களுக்கு பதக்கம் வழங்கும் விழா நடைபெற்று வருவதாகவும், சீர்மிகு பணிக்கான பதக்கங்களை போலீசுக்கு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி வழங்கி வருவதாகவும் தகவல்கள் வந்துள்ளது. தர்ணா போரட்டம் நடைபெறும் இடத்தையே அலுவலகமாக மாற்றிவிட்ட முதல்வருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

 

#MamataVsCBI #KolkataPolice #CBIvsMamata

Leave a Reply