அபுதாபியில் போப்பாண்டவர்: உற்சாக வரவேற்பால் மகிழ்ச்சி

அபுதாபியில் போப்பாண்டவர்: உற்சாக வரவேற்பால் மகிழ்ச்சி

அபுதாபிக்கு சென்ற போப்பாண்டவருக்கு அந்நாட்டு அரசு உற்சாக வரவேற்பு அளித்துள்ளதால் போப்பாண்டவர் தன்னுடைய மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகம் இந்த ஆண்டை சகிப்புத்தன்மை ஆண்டாக கடைப்பிடித்து வரும் நிலையில் இந்நாட்டின் பட்டத்து இளவரசர் அழைப்பின் பேரில் போப்பாண்டவர் அபுதாபிக்கு வருகை தந்தார்

வாடிகன் நகரில் இருந்து தனி விமானம் மூலம் அபுதாபி நகருக்கு போப் ஆண்டவர் பிரான்சிஸ் வருகை தந்தார். அதிபர் மாளிகையில் அவருக்கு சிறப்பான வரவேற்பை அளித்த துணை அதிபர் மற்றும் அபுதாபி பட்டத்து இளவரசர் ஆகியோர்களுடன் போப் முக்கிய ஆலோசனை நடத்தினார்.

இதனை தொடர்ந்து அமீரக அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் தலைமை இமாம் ஆகியோர் போப் ஆண்டவரை சந்தித்தனர்.முன்னதாக அரண்மனை ராணுவ மைதானத்தில் 21 குண்டுகள் முழங்க அவருக்கு, அரசு மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து விமான படையினரின் சாகச நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

Leave a Reply