சசிகுமாரின் அடுத்த படத்தின் நாயகியாகும் முன்னணி நடிகை
சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் சசிகுமார் நடித்த ‘பேட்ட’ திரைப்படம் வெற்றி பெற்றுள்ள நிலையில் சசிகுமார் தற்போது ‘நாடோடிகள் 2′, கொம்பு வச்ச சிங்கம்’ மற்றும் ‘கென்னடி கிளப் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் சுந்தர் சியின் உதவியாளர் கதிர் இயக்குனராக அறிமுகமாகும் படத்தில் சசிகுமார் ஹீரோவாக நடிக்கவுள்ளார். இந்த படத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான நிக்கி கல்ராணி அவருக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார்.
‘சசிகுமார் 19’ என்று தற்போதைக்கு அழைக்கப்படும் இந்த படத்தை . செந்தூர் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. சாம் சிஎஸ் இசையில் சித்தார்த் ஒளிப்பதிவில், சாபு ஜோசப் படத்தொகுப்பில் உருவாகவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவுள்ளது.