கூட்டணி இல்லை, 40 தொகுதிகளிலும் தனித்து போட்டி: கமல் அறிவிப்பு
அதிமுக-பாஜக கூட்டணியில் கமல்ஹாசனின் மக்கள் நீதிமய்யம் கூட்டணி அமைக்காது என்பது தெரிந்ததே. ஆனால் திமுக-காங்கிரஸ் கூட்டணியில் இணைய வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது. இந்த நிலையில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரில் உள்ள 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடும் என கமல்ஹாசன் கூறியுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன் ஒருசில அரசியல் கட்சிகளுடன் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறிய கமல், தற்போது திடீரென 40 தொகுதிகளிலும் தனித்து போட்டி என அறிவித்திருப்பது அவரது கட்சியினர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இருப்பினும் கடைசி நேரத்தில் தினகரனின் அமமுகவுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.