ரஜினிகாந்த்-திருநாவுக்கரசர்-திருமாவளவன் சந்திப்பு! புதிய கூட்டணியா?

ரஜினிகாந்த்-திருநாவுக்கரசர்-திருமாவளவன் சந்திப்பு! புதிய கூட்டணியா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் இளையமகள் செளந்தர்யாவுக்கு வரும் 11ஆம் தேதி திருமணம் நடைபெறவுள்ளதை அடுத்து முக்கிய பிரமுகர்களை நேரில் சந்தித்து அழைப்பிதழ் கொடுத்து வருகிறார்

இந்த நிலையில் இன்று அவர் முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் மற்றும் திருமாவளவன் ஆகியோர்களை நேரில் சந்தித்து தனது மகளின் திருமண அழைப்பிதழை அளித்தார். இருவரும் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக உறுதி செய்துள்ளார்.

இந்த சந்திப்பை வைத்து ஒருசில இணையதளங்களில் வரும் தேர்தலில் புதிய கூட்டணி அமையவிருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஆனால் இந்த சந்திப்பின்போது அரசியல் எதுவும் பேசவில்லை என்று ரஜினி தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply