நாளை தமிழக பட்ஜெட்: தேர்தலை ஒட்டி புதிய சலுகை அறிவிப்பா?
சமீபத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டை எதிர்க்கட்சிகள் பாஜகவின் தேர்தல் அறிக்கை என விமர்சனம் செய்த நிலையில் நாளை தாக்கல் செய்யப்படவுள்ள தமிழக பட்ஜெட்டிலும் சலுகை அறிவிப்புகள் இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் நாளை 2019-20ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளார். மக்களவைத் தோ்தல் நடைபெற உள்ளதால் இந்த நிதிநிலை அறிக்கையில் சில முக்கிய அறிவிப்புகள், கவா்ச்சிகர திட்டங்கள் இடம்பெறலாம் என்று கூறப்படுகிறது.
தமிழக பட்ஜெட்டில் என்னென்ன சலுகைகள் வரும் என்பதை நாளை வரை பொறுத்திருந்து பார்ப்போம்