ஓவியாவின் 90ml படத்தின் சென்சார் தகவல்
நடிகை ஓவியா தற்போது ‘காஞ்சனா 3, களவாணி 2 மற்றும் 90ml ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மூன்று படங்களுமே விரைவில் ரிலீஸ் செய்ய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன
இந்த நிலையில் ஓவியாவின் 90ml திரைப்படத்தின் சென்சார் தகவல் தற்போது வெளிவந்துள்ளது. இந்த படத்தில் இரட்டை அர்த்த வசனங்கள் மற்றும் அதிகப்படியானா கிளாமர் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில் தற்போது அதனை உறுதிசெய்யும் வகையில் இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகல் ஏ சர்டிபிகேட் அளித்துள்ளனர்,
அனிதா உதூப் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு சிம்பு இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் பாடல்கள் வெளியீடு விரைவில் நடைபெறவுள்ளதாகவும் வரும் கோடை விடுமுறையில் இந்த படம் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் டிரைலர் இன்று வெளியாகவிருப்பதாக ஓவியா தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.