கடலூர் சிறை சென்ற ஹெச்.ராஜா! ஏன் தெரியுமா?
பாஜக பிரமுகர் கல்யாணராமன் சமீபத்தில் குறிப்பிட்ட ஒரு மதம் குறித்து தனது ஃபேஸ்புக்கில் சர்ச்சைக்குரிய கருத்தை பதிவு செய்ததற்காக கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டு அதன் பின் அவர் கடலூர் சிறைக்கு மாற்றப்பட்டார்.
இந்த நிலையில் கடலூர் சிறையில் இன்று கல்யாணராமனை, பா.ஜ.க. தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா சந்தித்தார். இந்த சந்திப்புக்கு பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
சென்னை புழல் சிறையில், கல்யாணராமன் தலைக்கு விலை நிர்ணயம் செய்தவர்கள் யார் என்பதை இந்த அரசு கண்டுபிடிக்க வேண்டும் என்று கூறினார்.
மேலும் சினிமாக்காரர்கள் அரசியலுக்கு வருவது குறித்து கருத்து தெரிவித்த பா.ஜ.க. தேசியச் செயலாளர் ராஜா, ‘திரைப்படங்களால் சமூதாயம் சீரழிந்து வருவதாக, பெரியார் அப்போதே கூறியுள்ளதாக தெரிவித்ததாக கூறினார்.