தமிழகம் படையெடுக்கும் பாஜக தலைவர்கள்!

தமிழகம் படையெடுக்கும் பாஜக தலைவர்கள்!

இந்தியாவிலேயே மிக மோசமான ஓட்டு சதவிகிதத்தை பாஜக கொண்டுள்ள மாநிலம் என்றால் அது தமிழகமாகத்தான் இருக்க வேண்டும். கடந்த 2014ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் இந்தியா முழுவதும் மோடி அலை இருந்திருந்த நேரத்திலும் தமிழகத்தில் ஒரே ஒரு தொகுதியை மட்டுமே பாஜக பெற்றது.

இந்த நிலையில் வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் கணிசமான தொகுதியில் வெல்ல வேண்டும் என்று பாஜக தலைமாஇ தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது. அந்த வகையில் பிரதமர் மோடி , பாஜக தேசிய தலைவர் அமித்ஷா மற்றும் நிதின்கட்காரி ஆகியோர் தமிழகத்திற்கு படையெடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் பிப்ரவரி 10ஆம் தேதி திருப்பூர் வருகிறார் பிரதமர் மோடி. அதனையடுத்து பிப்.12 – யோகி ஆதித்யநாத் நெல்லைக்கும், பிப்.14 – அமித்ஷா ஈரோடுக்கும், பிப்.15 – நிதின்கட்கரி சென்னைக்கும் மீண்டும் பிப்.22 – அமித்ஷா ராமேஸ்வரத்திற்கும் வருகை தரவுள்ளனர்.

Leave a Reply