பள்ளி கழிவறையை சுத்தம் செய்த தலைமை ஆசிரியர்
அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர் மாணவர்கள் பயன்படுத்தும் கழிவறையை தானே சுத்தமாக்கிய செய்தி இணையதளங்களில் புகைப்படங்களுடன் பரவி வருகிறது
கர்நாடக மாநிலத்தில் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக இருப்பவர் மகாதேஷ்வரா சுவாமி. இவர் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த பள்ளியின் கழிவறையை அவரே சுத்தப்படுத்தி வருகிறார். இதன்மூலம் மாணவர்களுக்கும் கழிவறையை சுத்தப்படுத்தும் பழக்கம் ஏற்படும் என்பதே இவரது நம்பிக்கை
மேலும் தலைமை ஆசிரியர் மகாதேஷ்வரா சுவாமி தனது சொந்த பணத்தில் பள்ளி நூலகத்திற்கு ஏராளமான புத்தகங்களை வாங்கி கொடுத்துள்ளார். அதுமட்டுமின்றி பள்ளியில் உள்ள செடி, மரங்கள் வைக்கவும் இவர் உதவி செய்துள்ளார். ஆசிரியர் தொழிலை தொழிலாக செய்யாமல் சேவை மனப்பான்மையுடன் செய்து வரும் மகாதேஷ்வரா சுவாமி அவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.