மத்திய அரசு மீது தம்பிதுரை மீண்டும் தாக்கு: அதிர்ச்சியில் பாஜக
தமிழகத்தில் அதிமுக-பாஜக கூட்டணிக்கு முட்டுக்கட்டையாக இருந்து வரும் தம்பிதுரை எம்பி, கடந்தசில வாரங்களாக பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். இதனால் அதிமுக-பாஜக கூட்டணி ஏற்படுமா? என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.
இந்த நிலையில் இன்று மக்களவையில் மீண்டும் மத்திய அரசை தம்பிதுரை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அவர் கூறியதாவது: பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் சிறுதொழில்கள், அமைப்பு சாரா தொழில்கள் அனைத்தும் நசிந்து அழிந்துவிட்டன. மாநிலங்களின் உரிமைகள் அனைத்தும் பறிக்கப்பட்டுவிட்டன. தமிழகத்துக்கு மட்டும் மத்திய அரசு தர வேண்டிய நிதி ரூ.12 ஆயிரம் கோடி நிலுவையில் இருக்கிறது என்று தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
தம்பிதுரையின் ஆவேசமான பேச்சால் பாஜக அதிர்ச்சியில் இருப்பதாக கூறப்படுகிறது.