பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் அபராதம் எவ்வளவு தெரியுமா? தமிழக அரசு எச்சரிக்கை
கடந்த ஜனவரி 1ஆம் தேதி முதல் தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் கிட்டத்தட்ட பெரும்பாலான பகுதிகளில் பிளாஸ்டிக் உபயோகம் நிறுத்தப்பட்டது. இருப்பினும் ஒருசில இடங்களில் கேரிபேக் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்களை சிலர் பயன்படுத்தி வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது
இந்த நிலையில் தமிழகத்தில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று கூறிய அமைச்சர் வேலுமணி அதற்கான சட்ட முன்வடிவை சற்றுமுன் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்
இதனையடுத்து இனிமேலும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது
பிளாஸ்டிக், தமிழக அரசு, எச்சரிக்கை, தடை, அபராதம்