சிமெண்ட் விலை திடீர் உயர்வு: கட்டுப்படுத்த அரசுக்கு கோரிக்கை

சிமெண்ட் விலை திடீர் உயர்வு: கட்டுப்படுத்த அரசுக்கு கோரிக்கை

இந்தியாவின் முக்கிய துறைகளில் ஒன்றான கட்டுமான துறை அதிர்ச்சி அடையும் வகையில் சிமெண்ட் விலை நாளுக்கு நாள் விஷம் போல் ஏறிக்கொண்டே இருக்கின்றது தமிழகத்தில் சிமெண்ட் விலை கடந்த ஒரே வாரத்தில் ரூ.37 உயர்ந்துவிட்டதால் கட்டுமான தொழில் மந்தமாகியுள்ளது

இந்த நிலையில் திடீரென சிமெண்ட் விலை உயர்ந்துள்ளதால் அதன் விலையை கட்டுப்படுத்த அரசுக்கு கட்டுமான வல்லுனர் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது. கடந்த வாரம் வரை ரூ.250 வரை விற்கப்பட்ட சிமெண்ட் மூட்டை விலை தற்போது ரூ.340 முதல் ரூ.360 வரை விற்கப்படுகிறது.

ஆந்திரம், தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் சிமெண்ட் குறைந்த விலையில் கிடைக்கும் நிலையில் தமிழ்நாட்டில் கூடுதலாக விலை உயர்ந்து கொண்டே வருவதை மத்திய அரசு கட்டுப்படுத்த வேண்டும் என்று கட்டுமான வல்லுனர் சங்கம் வலியுறுத்தி வருகிறது

Leave a Reply