தமிழக அரசின் தடை அறிவிப்பால் அதிரடி முடிவெடுத்த டிக்டாக்
டிக்டாக் செயலியை தடை செய்ய மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் என சட்டப்பேரவையில் சமீபத்தில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் கூறியதை அடுத்து டிக்டாக் நிர்வாகம் அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளது.
இதன்படி பாதுகாப்பான பொழுதுபோக்கு சேவையாக டிக் டாக செயலி இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், டிக்டாக் விதித்த விதிமுறைகள் மற்றும் சமூக வழிகாட்டுதல்களை மீறும் வீடியோக்கள் குறித்து புகார் அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், புகார் அளிப்பதற்கென ஒரு புதிய சேவை அறிமுகம் செய்யப்படும் என்றும் டிக் டாக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
டிக் டாக் செயலியில் கடந்த சில மாதங்களாக அரசியல்வாதிகள் மற்றும் திரையுலக பிரபலங்களை நாகரீகமற்ற முறையில் விமர்சனம் செய்யும் வீடியோக்கள் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது