பிரதமர் பதவி என்ன நாற்காலி விளையாட்டா? மகாராஷ்டிரா முதல்வர் கிண்டல்
பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான ஆட்சியை வீழ்த்துவதற்காக மாநில கட்சிகள் ஒன்றிணைந்து மெகா கூட்டணி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவது குறித்து மகராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் கிண்டலடித்துள்ளார். அவர் இதுகுறித்து கூறியதாவது:
கிட்டத்தட்ட 20 முதல் 25 கட்சிகள் இணைந்து பா.ஜனதாவை எதிர்த்து மெகா கூட்டணி அமைத்துள்ளன. அவர்களால் தங்கள் கட்சி சார்பில் 10 பேரை கூட பாராளுமன்ற தொகுதியில் வெற்றி பெற செய்ய முடியாது. ஆனால் அவர்கள் பிரதமர் பதவிக்கு ஆசைப்படுகின்றனர்.
இசை நாற்காலி விளையாட்டில் இசை நிற்கும்போது நாற்காலியை கைப்பற்றும் நபர் வெற்றி பெற்றவர் ஆகிவிடுவார். இங்கு 25 கட்சிகள் சேர்ந்து பிரதமர் இருக்கைக்காக இசை நாற்காலி விளையாட்டு போட்டியை நடத்துகின்றன. இது நாட்டின் வளர்ச்சியை பாதிக்கும் செயலாகும்.