பதிலடி ஒன்றே பாகிஸ்தானுக்கு வழி: இந்தியாவை உசுப்பிவிடும் இம்ரான்கான்

பதிலடி ஒன்றே பாகிஸ்தானுக்கு வழி: இந்தியாவை உசுப்பிவிடும் இம்ரான்கான்

புல்வாமா தாக்குதலில் இந்திய பாதுகாப்பு படை வீரர்கள் 44 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்புதான் காரணம் என உலகறிந்ததே. ஆனால் வழக்கம்போல் பாகிஸ்தான், இந்த தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என கூறி வருகிறது

இந்த நிலையில் இந்த தாக்குதல் குறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் பேசிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில், ‘ புல்வாமா தற்கொலைபடை தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கு எந்தவித சம்பந்தமும் கிடையாது. இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் காரணம் என எந்த ஆதாரமாவது உள்ளதா? அவ்வாறு ஆதாரம் இருந்தால் கொடுங்கள், நாங்கள் உறுதியான நடவடிக்கை எடுக்கின்றோம்,

நாங்கள் பேச்சுவார்த்தைக்கு எப்போதும் தயாராக இருக்கின்றோம். ஆனால் அதே நேரத்தில் பாகிஸ்தானை தாக்க விரும்பினால் இந்தியாவுக்கு ஒன்றை கூற விரும்புகிறேன். எங்களுக்கு பதிலடி கொடுப்பதை தவிர வேறு வழியில்லை’ என்று இம்ரான்கான் கூறியுள்ளார்.

Leave a Reply