பாஜக இடம்பெறும் கூட்டணியில் நாங்கள் இல்லை: தமிமுன் அன்சாரி

பாஜக இடம்பெறும் கூட்டணியில் நாங்கள் இல்லை: தமிமுன் அன்சாரி

பா.ஜ.க இடம்பெறக் கூடிய கூட்டணியில் மனிதநேய ஜனநாயக கட்சி இடம்பெறாது என்று அக்கட்சியின் எம்.எல்.ஏ தமிமுன் அன்சாரி உறுதிபட தெரிவித்துள்ளார்.

மேலும் தங்கள் கட்சி எந்த கூட்டணியில் இணையும் என்பது குறித்து சென்னையில் நடைபெறும் கட்சியின் தலைமை நிர்வாகக் குழுவில் முடிவு செய்யப்படும் என்றும் மனிதநேய ஜனநாயக கட்சியில் அரசியல் நிலை குறித்து பிப்ரவரி 28ஆம் தேதி அறிவிக்கப்படும் என்றும் தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.

திமுக கூட்டணியில் ஏற்கனவே அதிக கட்சிகள் இருப்பதால் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு இடம் கிடைக்காது என்று கூறப்படுவதால் தினகரன் கூட்டணியில் இக்கட்சி கூட்டணி சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply