10 தொகுதிகள் காங்கிரசுக்கு கொடுத்தது சரியா?
கடந்த 2009ஆம் ஆண்டு தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் கட்சிக்கு அன்றைய திமுக தலைவர் கருணாநிதி 15 தொகுதிகளை ஒதுக்கியும் அக்கட்சி 8 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. அதே நேரத்தில் 2014ஆம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டியிட்டு ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை
இதேபோல் 2016ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் திமுக கூட்டணியில் இருந்தும் காங்கிரஸ் பெரும்பாலான தொகுதியில் தோல்வி அடைந்தது. காங்கிரஸ் தோல்வி அடைந்த தொகுதியில் திமுக போட்டியிட்டிருந்தால் நிச்சயம் வெற்றி பெற்றிருக்கும் என்றே கூறப்படுகிறது
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு திமுக 10 தொகுதிகள் கொடுத்தது அதிகம் என்றே கூறப்படுகிறது. அதிமுக அணி வலுவாக இருக்கும் நிலையில் கொடுக்கப்பட்ட 10 தொகுதியில் நான்கு தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெற்றாலே அது பெரிய விஷயம் என்று எதிர்பார்க்கப்படுகிறது