சென்னையில் மீண்டும் ஏசி பேருந்துகளா?
கடந்த சில வருடங்களுக்கு முன் சென்னையில் ஏசி பேருந்துகள் மாநகரை வலம் வந்து பின் திடீரென மாயமாகிவிட்ட நிலையில் தற்போது சென்னையில் மீண்டும் ஏசி பேருந்துகளை இயக்க அரசு திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
கரூரில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர், ‘விரைவில் 3+2 இருக்கை வசதியுடன் 100 குளிர்சாதன வசதி பேருந்துகள் இயக்கப்படும் என்றும், அவற்றில் 50 குளிர்சாதன வசதி கொண்ட பேருந்துகள் சென்னை மாநகரத்தில் இயக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
தற்போது மெட்ரோ ரயில் சென்னையின் முக்கிய பகுதிகளில் இயங்கி வந்தாலும் ஏசி பேருந்துகள் வந்தால் மக்களின் வரவேற்பு நிச்சயம் கிடைக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது