லஞ்சம் வாங்குபவர்களை தூக்கில் போட வேண்டும் : நீதிபதிகள் ஆவேசம்

லஞ்சம் வாங்குபவர்களை தூக்கில் போட வேண்டும் : நீதிபதிகள் ஆவேசம்

லஞ்சம் வாங்குபவர்களை தூக்கில் போட வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லஞ்சம் என்ற சொல் தமிழகத்தில் தற்போது சர்வ சாதாரணமாகிவிட்டது. வாங்குபவர்கள் மட்டுமின்றி கொடுப்பவர்களும் இதனை தவறு என்று எண்ணுவதில்லை. இதனால் லஞ்சமென்பது தவறு என்ற நிலை மாறி இதுவொரு வழக்கமான நடவடிக்கை என்றாகிவிட்டது

இந்த நிலையில் லஞ்சம் தொடர்பான வழக்கின் விசாரணை ஒன்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் விசாரணைக்கு வந்தது போது நீதிபதிகள் கூறியதாவது:-

லஞ்சம் வாங்குவோரை தூக்கில் போட வேண்டும், சொத்துகளை பறிமுதல் செய்ய வேண்டும். லஞ்சம் வாங்குவோர் மீது தேசத்துரோக வழக்குப்பதிவு செய்ய வேண்டும். கடுமையான தண்டனை வழங்கினால் தான் லஞ்சம் வாங்குவது குறையும்.
கடும் தண்டனை அளித்தால் தான் லஞ்சம் வாங்குவது இயல்பானது என்ற நினைப்பை மாற்ற முடியும். லஞ்சம் வாங்கும் பழக்கம் முழுமையாக ஒழிய வேண்டும் என்றால் கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இவ்வாறு உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கிருபாகரன்-சுந்தர் அடங்கிய அமர்வு கருத்து தெரிவித்துள்ளது.

ஆனால் லஞ்சம் என்பது நீதிமன்ற வளாகத்திலும் இருப்பதாக இந்த கருத்து குறித்து நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

Leave a Reply