அதிமுக கூட்டணியா? தனித்து போட்டியா? தேமுதிக இன்று அறிவிப்பு
அதிமுக கூட்டணியில் சேருவதா? அல்லது தனித்து நிற்பதா என்பது குறித்து தேமுதிக தொகுதி பங்கீட்டுக்குழுவுடன், அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் ஆலோசனை செய்து வரும் நிலையில் இறுதி முடிவு இன்று அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேமுதிக – அதிமுக இடையே தொகுதிப் பங்கீட்டில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், கூட்டணி பேச்சுவார்த்தையில் சுணக்கம் நீடித்து வருகிறது. இந்த நிலையில், அதிமுக கூட்டணியில் இணைவதா? வேண்டாமா? என்பதை அறிய தேமுதிக தொகுதி பங்கீட்டுக்குழுவுடன், அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் 2வது நாளாக இன்று ஆலோசனை நடத்தி வருகின்றார்.
சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், பிரேமலதா விஜயகாந்த் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது. கட்சி நிர்வாகிகளுடன் இரண்டாவது நாளாக விஜயகாந்த் ஆலோசித்து வருவதால், இன்றாவது கூட்டணி உறுதியாகுமா என்பது தேமுதிக தொண்டர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.