ஆளுநர் மாளிகை மீது நடவடிக்கை எடுக்க பேரறிவாளன் வலியுறுத்தல்
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கு பேரறிவாளன் உள்பட 7 பேர்களை விடுதலை செய்வது குறித்து தமிழக அரசு முடிவெடுக்கலாம் என உச்ச நீதிமன்றம் கூறியும் இதுகுறித்த தீர்மானத்தின் மீது கவர்னர் இன்னும் நடவடிக்கை எடுக்காமல் உள்ளார்.
இந்த நிலையில் தங்களது விடுதலை தாமதம் ஆவது குறித்த கேள்விக்கு பதில் அளிக்காத ஆளுநர் மாளிகை மீது நடவடிக்கை எடுக்க கோரி பேரறிவாளன் வலியுறுத்தியுள்ளார்.
ஒருபக்கம் பேரறிவாளன் தாயார் இதுகுறித்து போராட்டம் நடத்தி வரும் நிலையில் தற்போது பேரறிவாளனும் வலியுறுத்தியுள்ளதால் விரைவில் இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.