7ல் இருந்து இறங்காத தேமுதிக, 4ல் இருந்து ஏறாத அதிமுக: இழுபறியில் கூட்டணி
அதிமுக – பாஜக – பாமக கூட்டணியில் தேமுதிக இணைய வாய்ப்புகள் மங்கி வருவதாக கூறப்படுகிறது
7 தொகுதிகளை விட்டு விஜயகாந்த் இறங்கி வராததாலும், 4 தொகுதியில் இருந்து அதிமுக ஏறி வராததாலும் பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது
தற்போது கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்து வரும் விஜயகாந்த் இன்னும் சற்று நேரத்தில் தனது முடிவை அறிவிப்பார் என்றும், தேமுதிகவின் முடிவுக்காக அதிமுக காத்திருப்பதாகவும் தெரிகிறது
இன்று மாலை பிரதமரின் வண்டலூர் பிரச்சாரத்திற்கு முன் விஜயகாந்த் தனது முடிவை தெரிவிப்பாரா? அல்லது தொடர்ந்து இழுபறியாகுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்