விபரீதத்தை விலை கொடுத்து வாங்க வேண்டாம்: தேமுதிகவிற்கு வைகோ எச்சரிக்கை
திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டை தேமுதிகவினர் முற்றுகையிட்டது கண்டனத்துக்குரியது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
திமுக பொருளாளர் துரைமுருகன் மீது துரும்பு பட்டாலும் தே.மு.தி.க இருக்காது என்று எச்சரித்த வைகோ, செய்தியாளர்களை பிரேமலதா விஜயகாந்த் ஒருமையில் பேசியது தவறானது என்றும் இனிமேலாவது திருத்திக்கொள்ள வேண்டும் என்றும், கருணாநிதியை சந்திக்க விஜயகாந்த் நேரம் கேட்டபோது ஸ்டாலின் நிச்சயம் மறுத்திருக்க மாட்டார் என்றும், திமுகவை விமர்சிப்பதின் மூலம் விபரீதத்தை விலை கொடுத்து வாங்க வேண்டாம் என்றும் தேமுதிகவிற்கு வைகோ எச்சரிக்கை விடுத்துள்ளார்.