ஆர்யாவின் அடுத்த பட டைட்டில் இதுதான்

ஆர்யாவின் அடுத்த பட டைட்டில் இதுதான்

நடிகர் ஆர்யா கடந்த சில ஆண்டுகளாக வெற்றிப்படத்தை கொடுக்காத நிலையில் ஞானவேல்ராஜா தயாரிப்பில் சமீபத்தில் ‘கஜினிகாந்த் என்ற படத்தில் நடித்தார். இந்த படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அதே தயாரிப்பாளர் தயாரிக்கும் இன்னொரு படத்தில் நடிக்கவுள்ளார்.

இந்த படத்தை சக்தி செளந்திரராஜன் இயக்கவுள்ளார். இந்த படத்திற்கு ‘டெடி’ என்ற டைட்டில் வைக்கப்பட்டு டைட்டில் போஸ்டரும் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கவுள்ளார். இந்த படத்தில் நடிக்கும் நாயகி உள்பட மற்ற நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் நடிகர் ஆர்யா, நடிகை சாயிஷாவை நாளை திருமணம் செய்யவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply