சித்தார்த்தை பாடகராக மாற்றிய இசையமைப்பாளர் தமன்

சித்தார்த்தை பாடகராக மாற்றிய இசையமைப்பாளர் தமன்

நடிகர் சித்தார்த் நடிப்பது மட்டுமின்றி அவ்வப்போது பாடல்களையும் பாடி வரும் நிலையில் தமன் தான் இசையமைக்கும் ஒரு படத்திலும் ஒரு பாடலை சித்தார்த்தை பாட வைத்துள்ளார்.

நடிகர் சந்தீப் கிஷான் நடித்து தயாரிக்கும் படம் கண்ணாடி. இந்த படம் தெலுங்கில் நினு வீடனி நீடனு என்ற டைட்டிலிலும் உருவாகி வருகிரது. இந்த படத்திற்காகத்தான் சித்தார்த் ஒரு தெலுங்கு பாட்லை பாடியுள்ளார்.

இந்த பாடல் சமீபத்தில் ஒலிப்பதிவு செய்யப்பட்ட போது இந்த படத்தின் நாயகனும் தயாரிப்பாளருமான சந்தீப் கிஷான் உடனிருந்தார். இந்த படத்தை கார்த்திக் ராஜூ இயக்கியுள்ளார். இவர் தமிழில் ‘திருடன் போலீஸ்’ என்ற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply