3 தொகுதிகளில் ஏன் இடைத்தேர்தல் இல்லை? தேர்தல் ஆணையத்தை நாட திமுக திட்டம்

3 தொகுதிகளில் ஏன் இடைத்தேர்தல் இல்லை? தேர்தல் ஆணையத்தை நாட திமுக திட்டம்

நாடாளுமன்ற தேர்தல் தேதி நேற்று அறிவிக்கப்பட்டபோது தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 18ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்றும், அத்துடன் 18 சட்டமன்ற இடைத்தேர்தல் நடத்தப்படும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்தது

இதில் அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளின் வழக்குகள் நீதிமன்றத்தில் இருப்பதால் இந்த தொகுதிகளில் தேர்தல் நடத்தப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படாதது ஏன் என்பது குறித்து தேர்தல் ஆணையத்தை நாட திமுக திட்டமிட்டுள்ளது.

இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் நடைபெறும் எம்.பி, எம் எல் ஏக்கள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது

 

Leave a Reply