பொள்ளாச்சி பாலியல் விவகார வழக்கு: கோவை எஸ்.பிக்கு திமுக கண்டனம்
பொள்ளாச்சியில் இளம்பெண்களை மிரட்டி ஆபாச படம் எடுத்த வழக்கில் நான்குபேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் கைது செய்யப்பட்டவர்களின் பின்னணியில் அரசியல்வாதிகள் இருப்பதாகவும், ஒருசில அரசியல்வாதிகளின் வாரிசுகளும் இந்த குற்றத்தில் சம்பந்தப்படுத்தப்பட்டிருப்பதாகவும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியானது
ஆனால் இந்த வழக்கு குறித்து பேட்டியளித்த கோவை எஸ்பி, ‘இந்த வழக்கில் 100 சதவிகிதம் அரசியல் வாரிசுகளுக்குத் தொடர்பில்லை” என்று கூறினார்.
பொள்ளாச்சி வழக்கில் கோவை எஸ்.பியின் இந்த பேட்டிக்கு திமுக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து திமுக பிரமுகரும், முன்னாள் சென்னை மேயரும் தற்போதையை சைதை தொகுதியின் எம்.எல்.ஏவுமான மா.சுப்பிரமணியன் கூறியதாவது:
பொள்ளாச்சி பாலியல் வழக்கை தீர விசாரிக்காமலேயே இவ்வளவு அவசரமா உங்களை ஸ்டேட்மெண்ட் கொடுக்கச்சொன்ன சக்தி எது? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
“100 சதவிகிதம் அரசியல் வாரிசுகளுக்குத் தொடர்பில்லை" – பொள்ளாச்சி வழக்கில் கோவை எஸ்.பி பேட்டி!
வழக்கை தீர விசாரிக்காமலேயே இவ்வளவு அவசரமா உங்களை "statement"கொடுக்கச்சொன்ன சக்தி எது சார்…. pic.twitter.com/tGVJqJlsB5— Subramanian.Ma (@Subramanian_ma) March 12, 2019