21 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல்: சுப்ரீம் கோர்ட்டை நாடும் திமுக

21 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல்: சுப்ரீம் கோர்ட்டை நாடும் திமுக

தமிழகத்தில் கடந்த பல மாதங்களாக 21 தொகுதிகள் காலியாக இருக்கும் நிலையில் சமீபத்தில் தேர்தல் குறித்த அறிவிப்பை வெளியிட்ட தேர்தல் ஆணையம் 18 தொகுதிகளுக்கு மட்டுமே இடைத்தேர்தல் என அறிவித்துள்ளது

தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவுக்கு திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தமிழகத்தில் 18 தொகுதிகளோடு விடுபட்ட 3 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளது. இந்த மனு இன்று அல்லது நாளை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

18 தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் என்பது தேர்தல் ஆணையும் செய்யும் சதி அரசியல் கட்சிகஆள் குற்றஞ்சாட்டி வரும் நிலையில் சுப்ரீம் கோர்ட் மூலம் இதற்கு ஒரு நல்ல முடிவு ஏற்படும் என எதிர்பார்க்கப்பதாக அரசியல் கட்சி தலைவர்கள் கூறி வருகின்றனர்.

Leave a Reply