சிவகார்த்திகேயன் படத்திற்கு இசையமைக்கும் சந்தானம் பட இசையமைப்பாளர்.
சந்தானம் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த தில்லுக்கு துட்டு 2′ படத்திற்கு இசையமைத்த ஷபீர், சிவகார்த்திகேயன் தயாரிக்கும் அடுத்த படத்திற்கு இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்த படத்தில் இசையமைப்பது குறித்து ஷபீர் கூறியதாவது: ‘துடிப்பான இளைஞர்கள் உள்ள ஒரு குழுவில் இணைந்தது மகிழ்ச்சி. யூடியூபில் அவர்களது நகைச்சுவை நிகழ்ழ்சிகள் மூலை முடுக்கெல்லாம் பிரபலம். ஒரு புதுமையான அனுபவத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறேன். குறிப்பாக, சிவகார்த்திகேயன் சார் பேனரில் பணிபுரியும் ஒரு பெரிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதுவே எனக்கு சிறந்த இசையை வழங்கும் மிகப்பெரிய பொறுப்பை கொடுத்திருக்கிறது என்றார்.
சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் “தயாரிப்பு எண் 2” படத்தில் ரியோ ராஜ், ஷிரின் கஞ்ச்வாலா ஆகியோர் நாயகன், நாயகி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் ராதாரவி, நாஞ்சில் சம்பத், ஆர்.ஜே.விக்னேஷ்காந்த் மற்றும் பல பிரபலமான யூடியூபில் பிரபலமான சிலரும் நடித்திருக்கிறார்கள்.