‘கேஜிஎப். இரண்டாம் பாகம்: மீண்டும் விஷால் வாங்குவாரா?

‘கேஜிஎப். இரண்டாம் பாகம்: மீண்டும் விஷால் வாங்குவாரா?

பிரபல கன்னட நடிகர் யாஷ் ஹீரோவாக நடித்த கேஜிஎப் திரைப்படம் கன்னடத்தில் மட்டுமின்றி தென்னிந்தியா முழுவதும் சூப்பர்ஹிட் ஆனது. இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாக படத்தின் பூஜை இன்று பெங்களூரில் நடைபெற்றது

இந்த பூஜையில் யாஷ், இயக்குனர் பிரசாந்த் நீல், நடிகை ஸ்ரீநிதிஷெட்டி உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். பிரசாந்த் நீல் முதல் பாக கேஜிஎப் படத்தை இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

இன்று இந்த படத்தின் படப்பிடிப்பு இன்றே தொடங்கவிருப்பதாகவும் இந்த படத்தின் மற்ற விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் படக்குழுவினர் தெரிவித்தனர். இந்த நிலையில் கேஜிஎப் முதல் பாகத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை பெற்ற நடிகர் விஷால் பிரமாதமாக விளம்பரம் செய்து படத்தை வெற்றிப்படமாக்கினார். அதேபோல் இந்த இரண்டாம் பாகத்தையும் வாங்குவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Leave a Reply