அப்பா படத்தில் நடிக்கும் கீர்த்தி சுரேஷை வரவேற்கிறேன். பிரபல நடிகை

அப்பா படத்தில் நடிக்கும் கீர்த்தி சுரேஷை வரவேற்கிறேன். பிரபல நடிகை

இந்திய திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர், நடிகை கீர்த்தி சுரேஷூக்கு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வரவேற்பு அளித்துள்ளார்.

ஸ்ரீதேவியின் கணவரும் ஜான்வி கபூரின் தந்தையுமான போனிகபூர் தயாரிக்கவுள்ள பாலிவுட் படத்தில் அஜய்தேவ்கானுக்கு ஜோடியாக கீர்த்திசுரேஷ் நடிப்பது உறுதியாகியுள்ளது. இதனையடுத்து ஸ்ரீதேவியின் மகளும் நடிகையுமான ஜான்வி கபூர், கீர்த்தியை வரவேற்றுள்ளார்.

இதுகுறித்து ஜான்வி தனது இன்ஸ்டாகிராமில் கூறியபோது, ‘மகாநதி’ திரைப்படத்தைப் பார்த்ததில் இருந்து உங்கள் மீது அளவுகடந்த ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது. எங்கள் அப்பாவின் அடுத்த படத்தில் நீங்கள் இணைந்திருப்பது மிகுந்த உற்சாகமளிக்கிறது. நல்வரவு” என ஜான்வி கபூர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply