அசாருக்கு சொந்தமான சொத்துக்களை முடக்கம்: பிரான்ஸ் அரசு உத்தரவு
புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கத்தின் தலைவன் மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க வேண்டும் என்று உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன
இந்த நிலையில் பிரான்சில் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கத்தின் தலைவன் மசூத் அசாருக்கு சொந்தமான சொத்துக்களை முடக்கிவைக்க பிரான்ஸ் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது தொடர்பாக பிரான்ஸ் நாட்டின் உள்துறை அமைச்சகம்ம் நிதி அமைச்சகம் மற்றும் வெளியுறவு அமைச்சகம் கூட்டாக அறிக்கை பிறப்பித்துள்ளது. பிரான்ஸ் நாட்டை தொடர்ந்து அமெரிக்கா உள்பட இன்னும் பல்வேறு நாடுகள் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கத்தின் தலைவன் மசூத் அசாருக்கு எதிரான நடவடிக்கையில் இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது