அஜித்தின் அறிவுரை என் பாதையை மாற்றியது: அருண்விஜய்
நடிகர் அருண்விஜய் நல்ல திரைப்பட பின்னணி இருந்தாலும் பல ஆண்டுகளாக திரையுலகில் இருந்தால் அஜித்தின் ‘என்னை அறிந்தால்’ திரைப்படம் தான் அவருக்கு சரியான பிரேக். இந்த படத்தின் வெற்றியால் அவர் தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்கள் பட்டியலில் இணைந்தார்.
சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான ‘தடம்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படம் தெலுங்கு, மற்றும் இந்தியிலும் உருவாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் நேற்று ஒரு சினிமா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அருண்விஜய் அஜித் குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தபோது, ‘அஜித் ஒரு ஓப்பன் புக் என்றும், அவரை பற்றி ரகசியம் எதுவும் இல்லை என்றும் கூறிய அருண்விஜய், அவருடன் நடித்தபோது அவரிடம் இருந்து பல அறிவுரைகள் பெற்றதாகவும், அதன்பின்னர் தனது பாதையே மாறியதாகவும் தெரிவித்தார். மேலும் அஜித் மிக எளிமையான, மனிதநேயம் உள்ளவர் என்றும், அஜித் தனது ரசிகர்கள் மேல் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.