ஈரோடு தொகுதி மதிமுக வேட்பாளர் அறிவிப்பு
திமுக கூட்டணியில் ஒரே ஒரு தொகுதியை பெற்ற மதிமுகவுக்கு ஈரோடு தொகுதி ஒதுக்கப்பட்டதாக நேற்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்
இந்த நிலையில் ஈரோடு தொகுதியில் மதிமுக பொருளாளர் அ.கணேசமூர்த்தி போட்டியிடுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். இருப்பினும் மதிமுக வேட்பாளர் எந்த சின்னத்தில் போட்டியிடுவார் என்பது குறித்து இன்னும் முடிவெடுக்காதால் பிரச்சாரம் செல்ல இயலாத நிலையில் வைகோ உள்ளார்.
மேலும் மதிமுகவுக்கு ஒரு ராஜ்யசபா தொகுதி வழங்க திமுக ஒப்புக்கொண்டுள்ளது. அதில் வைகோ போட்டியிடுவார் என தெரிகிறது