எஸ்டிபிஐ கட்சிக்கு எந்த தொகுதி? டிடிவி தினகரன் அறிவிப்பு
டிடிவி தினகரன் கட்சியான அமமுக கூட்டணியில் இணைந்துள்ள ஒரே கட்சியான எஸ்டிபிஐ கட்சிக்கு மத்திய சென்னை தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.
மேலும் மத்திய சென்னை தவிர புதுச்சேரி உள்பட மற்ற 39 தொகுதிகளுக்கும் இன்னும் ஓரிரு நாட்களில் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என அக்கட்சியின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
டிடிவி தினகரன் தற்போது ஆர்.கே.நகர் தொகுதியின் எம்.எல்.ஏவாக இருப்பதால் அவர் வரும் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட மாட்டார் என தெரிகிறது