பண்டல் பண்டலாக நகைகளுடன் லாரி! மடக்கி பிடித்த பறக்கும் படையினர்

பண்டல் பண்டலாக நகைகளுடன் லாரி! மடக்கி பிடித்த பறக்கும் படையினர்

தேர்தல் தேதி அறிவித்த நாளில் இருந்தே பறக்கும் படையினர் இரவு பகலாக சோதனை செய்து வரும் நிலையில் தினமும் கோடிக்கணக்கான ரொக்கங்கள் பிடிபட்டு வருகின்றன

இந்த நிலையில் திருச்சியில் இருந்து வந்த பார்சல் லாரியில் பண்டல் பண்டலாக ஏராளமான நகைகள் இருந்ததால் பறக்கும்படையினர் அதனை பறிமுதல் செய்தனர்

பறிமுதல் செய்யப்பட்ட லாரி சீல் வைக்கப்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கொண்டு செல்லப்பட்டதாகவும், லாரியில் உள்ளது தங்க நகைகளா, கவரிங் நகைகளா என்பது குறித்து ஆய்வு செய்ய பறக்கும் படையினர் முடிவு செய்தனர்.

வாக்காளர்களுக்கு கொடுக்க இந்த நகைகள் கொண்டு செல்லப்பட்டதா? என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.

Leave a Reply