ஆர்யா-சாயிஷாவுக்கு மீண்டும் திருமணம்
நடிகர் ஆர்யாவுக்கு நடிகை சாயிஷாவுக்கும் கடந்த வாரம் திருமணமும் இந்த வாரம் ரிசப்ஷனும் நடந்த செய்தி அனைவருக்கும் தெரிந்ததே
இந்த நிலையில் ஆர்யாவுக்கும் சாயிஷாவுக்கும் மீண்டும் திருமணம் நடைபெறவுள்ளதாம். அதாவது ஆர்யா நடிக்கும் ‘டெடி’ என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக சாயிஷாவே நடிக்கவுள்ளார். இந்த படத்தில் இருவருக்கும் திருமணம் நடக்கும் காட்சி வருவதாகவும், இந்த காட்சி விரைவில் படப்பிடிப்பு நடத்தப்படவுள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளது.
ஸ்டுடியோக்ரீன் ஞானவேல்ராஜா தயாரிக்கும் இந்த படத்தை சக்தி செளந்திரராஜன் இயக்கவுள்ளார். இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கவுள்ளார்