திமுகவுக்கு மற்றொரு கட்சி ஆதரவு

திமுகவுக்கு மற்றொரு கட்சி ஆதரவு

வரும் பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள், ஐஜேகே உள்பட ஒருசில கட்சிகள் தொகுதிகள் பெற்று ஆதரவு அளித்துள்ள நிலையில் சில கட்சிகள் தொகுதிகள் பெறாமலேயே ஆதரவு அளித்து வருகின்றன, அந்த வகையில் தொகுதியே பெறாமல் ஆதரவு தரும் கட்சிகளில் ஒன்றுதான் மனித நேய மக்கள் கட்சி

சென்னை அண்ணா அறிவாலியத்தில் நேற்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்த மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா அதன்பின் செய்தியாளர்களிடம் கூறியபோது மக்களவை மற்றும் 18 தொகுதிகளில் இடைத்தேர்தலில் திமுக கூட்டணிக்கு மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு என்று தெரிவித்தார்.

வரும் 2021ஆம் ஆண்டு வரும் சட்டமன்ற தேர்தலில் இக்கட்சிக்கு திமுக கூட்டணியில் இடம் கிடைக்கும் என தெரிகிறது

Leave a Reply