சீட் கிடைக்காத அதிருப்தியில் தனித்து போட்டியிடும் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ

சீட் கிடைக்காத அதிருப்தியில் தனித்து போட்டியிடும் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ

அதிமுகவின் 20 மக்களவை வேட்பாளர்களும், 18 சட்டமன்ற தொகுதி வேட்பாளர்களும் நேற்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத பலர் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் விளாத்திக்குளம் தொகுதியில் போட்டியிட விருப்பமனு அளித்திருந்த அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ மார்கண்டேயனுக்கு இந்த முறை போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை. அவருக்கு பதிலாக விளாத்திகுளம் தொகுதியில் P சின்னப்பன் என்பவர் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில் விளாத்திகுளம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ மார்கண்டேயன் தனித்து போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார். மேலும் தலைமையை மாற்றுகிற சக்தி தொண்டர்களுக்கு உண்டு என்றும், அதிமுகவிற்கு புதிய தலைமையை தேர்வு செய்வோம் என்றும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

Leave a Reply