பிரசவத்தின்போது தலை துண்டான கொடூரம்: நர்ஸ்கள் பிரசவம் பார்த்ததால் பரிதாபம்

பிரசவத்தின்போது தலை துண்டான கொடூரம்: நர்ஸ்கள் பிரசவம் பார்த்ததால் பரிதாபம்

அரசு மருத்துவமனைகளிலும் தனியார் மருத்துவமனைகளிலும் மருத்துவர்கள் மட்டுமே பிரசவம் பார்க்க வேண்டும் என்ற விதி உள்ள நிலையில் விதியை மீறி சில இடங்களில் அவசரம் கருதி நர்ஸ்களே பிரசவம் பார்க்கும் நிலை ஏற்படுகிறது

இந்த நிலையில் சென்னை அருகே உள்ள கூவத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒரு பெண்ணின் பிரசவத்தின் போது குழந்தையின் தலை துண்டானதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

மருத்துவர்கள் இல்லாத நிலையில் கர்ப்பிணி பெண்ணுக்கு செவிலியர்களே பிரசவம் பார்த்ததாகவும் அதனால் தான் இந்த விபரீதம் ஏற்பட்டுள்ளதாகவும் அந்த பெண்ணின் உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் தலை துண்டானதால் குழந்தையின் உடல் பகுதி இன்னும் அந்த பெண்ணின் உள்ளேயே இருப்பதால் அந்த பகுதியை மீட்க அவரை செங்கல்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த நிலையில் செங்கல்பட்டு மருத்துவமனை மருத்துவர்கள் குழந்தையின் உடல்பகுதியை, தாயின் வயிற்றில் இருந்து போராடி மீட்டனர். பாதிக்கப்பட்ட தாய்க்கு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Leave a Reply